தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் – கால் கிலோ
- சிறிய வெங்காயம் – 10
- பூண்டு (நசுக்கியது) – 3 பல்
- தக்காளி – 1
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் –1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
- முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடயே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Good
பதிலளிநீக்கு