தேவையான பொருட்கள்:
- இட்லி – 5
- பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
- தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1
- மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
- முதலில் இட்லியை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம் சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து கூழாகும் வரை வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மசாலா திக்காகும் வரை கிளறவும்.
- இத்துடன் இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி எதுவும்
தேவையில்லை.
குறிப்பு: இட்லியில் உப்பு இருப்பதால்
கவனமாக உப்பு சேர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக