புதன், 12 பிப்ரவரி, 2014

காஞ்சிபுரம் உப்புமா


காஞ்சிபுரம் உப்புமா....இதை நான் மல்லிகை மகளின் “மண் வாசனை சமையல்” தொகுப்பில் எழுதிய போது, எனது நண்பர்கள் நிறைய பேர் அறிந்திருக்கவில்லை. மறந்து போன விஷயங்களை அனைவருக்கும் அறியப்படுத்தியத்தில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி!


இதோ ராணியின் அறுசுவை விருந்திலும்....

தேவையான பொருட்கள்:
  • வறுத்த ரவை  – 1 கப்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – ½” துண்டு
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் – 2 ½ கப்

தாளிக்க:
  • எண்ணெய்  – 2 டேபிள்ஸ்பூன்
  • நெய் – ½ டீஸ்பூன்  
  • கடுகு – ½  டீஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு – ½ டீஸ்பூன்
  • சீரகம் – ½ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • முந்திரி - 5 
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, மிளகு. சீரகம், முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்க்கவும்..  பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் லேசாக வதங்கியவுடன், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தேங்காய்த் துருவல் மற்றும் மஞ்சள் தூள்  சேர்க்கவும். பிறகு 2 ½ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து  மூடி தண்ணீர் நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும். பின் வறுத்த ரவையைக் கொதிக்கும் தண்ணீரில் கொட்டி, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும். உப்புமா நன்றாக வெந்தவுடன் நெய்  சேர்த்துக் கிளறி இறக்கவும்.


மிகவும் சுவையான இந்த உப்புமாவை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.

1 கருத்து: