ராகி புட்டு| கேழ்வரகு புட்டு
தேவையான பொருட்கள்:
- ராகி மாவு – 1 கப்
- உப்பு – சிறிதளவு
- நெய் – 1 டேபிள்ஸ்பூன்
- துருவிய தேங்காய் – ½ கப்
- சர்க்கரை – ½ கப்
- ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் ராகி மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
- ஒரு அகலமான பேசினில் சூடான ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இத்துடன் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு மாவை பிசிறவும்.
- இந்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- வேக வைத்த ராகி மாவுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக