தேவையான பொருட்கள்:
- பேபி பொடடோ – 250 கி
- பூண்டு (நசுக்கியது) – 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
- சாட் மசாலா – அரை டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
- தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பேபி பொடடோவை நன்றாக கழுவி, தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
- ஆறியவுடன், தோலுரித்து, மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலக்கவும்.
- இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.
- ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த உருளைகிழங்கு கலவையை அப்படியே சேர்க்கவும். நன்றாக எண்ணெயில் வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- இடையிடையே கிளறி விட்டு மசாலா நன்றாக சேர்ந்து வறுவலாக வந்தவுடன் இறக்கவும்.
I don't know and I can't read Tamil but I sure know this is a fabulous dish. Always a fav.
பதிலளிநீக்கு