தேவையான பொருட்கள்:
- சேனைக்கிழங்கு – கால் கிலோ
- புளி – எலுமிச்சை அளவு
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் புளியை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- சேனைக்கிழங்கை தோல் நீக்கி, கழுவி, அகலமான சதுர வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், புளி தண்ணீரை சேர்த்து, அதில் சேனை துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து, கிழங்கை மட்டும் தனியே வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சோம்புத்தூள், அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- இத்துடன் வேக வைத்த சேனை துண்டுகளை சேர்த்து, மசாலாவில் நன்கு புரட்டி, கால் மணி நேரம் ஊற விடவும்.
- ஒரு நான் ஸ்டிக் டவாவில், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சேனை துண்டுகளை சேர்த்து, இரு புறமும் திருப்பி விட்டு ஷாலோ ஃப்ரை செய்து எடுத்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக