சோள தோசை... சிறு தானியத்தில் ஒன்றான வெள்ளை
சோளத்தை அரிசிக்கு பதிலாக பயன்படுத்தி செய்யும் இந்த தோசை மிகவும் ஆரோக்கியமானது.
நான், ஏற்கனவே, சோள பணியாரம், சோள அடை ஆகியவற்றுக்கான செயமுறைகளை எனது ஆங்கில வலைப்பதிவான ராணீஸ் ட்ரீட்டில்
பதிவு செய்துள்ளேன். சோள தோசைக்கான செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்:
- வெள்ளை சோளம் – 1 கப்
- உளுத்தம்பருப்பு – ½ கப்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- வெள்ளை சோளத்தை தனியாகவும், உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்தும் கழுவி, களைந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- உளுத்தம்பருப்பு, வெந்தயக் கலவையை இட்லிக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, சோளம், ப.மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்து உளுத்தம்பருப்பு மாவோடு உப்பு சேர்த்துக் கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- இந்த தோசை மிகவும் மெல்லிதாக, கிரிஸ்பாக வார்க்க வரும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்தும் இந்த தோசையை செய்யலாம்.
மிக ஆரோக்கியமான இந்த தோசையை தக்காளி
சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
Tags: Chola dosai recipe in Tamil, Millet Recipes, Sorghum Dosa recipe, Jowar dosa
recipe, Healthy Breakfast recipe, வெள்ளை சோள தோசை, சர்க்கரை நோய்க்கான சிறப்பு உணவுகள், ஆரோக்கியமான
சிற்றுண்டி வகைகள், காலை/மாலை நேர உணவுகள், கிராமிய உணவுகள்
நீண்ட நாளைக்குப் பிறகு அருமையான பதிவுடன் வந்துள்ளீர்கள். நன்று.
பதிலளிநீக்குnanru
பதிலளிநீக்கு