தேவையான பொருட்கள்:
- ராகி ப்ளேக்ஸ் – அரை கப்
- பால் – 2 கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை – ½ கப்
- ஏலக்காய்– 2
- முந்திரி, பாதாம் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, ராகி ப்ளேக்ஸ் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- இத்துடன் கொதிக்க வைத்த பால் சேர்த்து ராகி ப்ளேக்சை வேக விடவும்.
- ராகி ப்ளேக்ஸ் வெந்தவுடன் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து வைத்த நட்ஸை கலந்து, அலங்கரித்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக