தேவையான பொருட்கள்:
- முளைக்கீரை – 1 கட்டு
- வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
- தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1
- பச்சை மிளகாய் (கீறியது) – 2
- பாசிப்பருப்பு – அரை கப்
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
- கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும்.
- கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
அருமை!
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்கு