ஆப்பிள் பிஸ்தா ஹல்வா
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் (துருவியது) – 1 கப்
கடலை மாவு – ½ கப்
பிஸ்தா (சிறு துண்டுகளாக்கியது) – கால் கப்
பால் – ½ கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை:
அடி கனமான கடாயில் 2
மேசைக்கரண்டி நெய் ஊற்றி, கடலை மாவை நிறம் மாறாமல் வாசம் வரும் வரை நன்றாக
வறுக்கவும். பிறகு, பெரிதாக துருவிய ஆப்பிளையும் வறுத்த கடலை மாவுடன் சேர்த்து
வதக்கவும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். தோல்
நீக்கி மிக்சியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்த பிஸ்தாவையும், மீதமுள்ள
நெய்யையும் சேர்த்து ஹல்வா பதம் வரும்
வரை கிளறி இறக்கவும்.
ஹல்வாவை நெய் தடவிய
தட்டில் ஊற்றி நன்றாக ஆறிய பின் வில்லைகள் போடலாம். இந்த ஹல்வா மிகவும் மிருதுவாக
இருக்கும். எனவே வில்லைகள் போட சிரமமாக இருந்தால் அப்படியே சாப்பிடலாம்.
இந்த ஹல்வாவை
சாப்பிடும் போது ஆப்பிள் துருவல் மற்றும் பிஸ்தா துண்டுகள் அங்கங்கு கிடைப்பதால்
மிகவும் வித்தியாசமான, அசத்தலான சுவையுடன்
இருக்கும் இந்த ஆப்பிள் பிஸ்தா ஹல்வா!
இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/apple-pista-halwa.html செல்லவும்.
இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/apple-pista-halwa.html செல்லவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக