தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- சர்க்கரை – முக்கால் கப்
- நெய் – அரை கப்
- ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
- பாதாம், முந்திரி (பொடித்தது) – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ரவையை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பேசினில் ரவை, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடித்த முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து மாவுடன் கலந்து வைக்கவும்.
- பிறகு அதே கடாயில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி, அதனை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
- கை பொறுக்கும் சூட்டில், மாவை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.